www.garudabazaar.com

KGF Chapter 2 படத்தின் ஒரு FDFS டிக்கெட் இம்புட்டு ரூபாயா? வெளியான OFFICIAL தியேட்டர் கட்டண விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

KGF Chapter 2 படத்தின் FDFS டிக்கெட் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Yash KGF Chapter 2 FDFS Movie Ticket Price Official

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது.

Yash KGF Chapter 2 FDFS Movie Ticket Price Official

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

Yash KGF Chapter 2 FDFS Movie Ticket Price Official

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது. உலகம் முழுவதும் டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  இந்நிலையில் உலகம் முழுவதும் KGF - 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கி செம வேகமாக நடந்து வருகிறது. 

Yash KGF Chapter 2 FDFS Movie Ticket Price Official

இந்நிலையில் KGF - 2 படத்தின் FDFS டிக்கெட் விலை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் படி அதிகாலை காட்சிக்கு பெங்களூருவில் டிக்கெட் கட்டணம் 2000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது போக 1800, 1500, 800, 500, 400 என தியேட்டர்களை பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 190 மற்றும் 155 & 120 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Yash KGF Chapter 2 FDFS Movie Ticket Price Official

People looking for online information on KGF, KGF 2 FDFS, KGF Chapter 2, KGF FDFS, KGF Tickets, Yash will find this news story useful.