Beast Intro April 13
Beast Others
www.garudabazaar.com

"வித்தியாசமான ஃபீலிங்.." BB-க்கு அப்புறம் முதல்முறை போனில் அழைத்த நிரூப்.. நெகிழ்ந்த அனிதா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, கடந்த சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது.

niroop called anitha and she shares in instagram

தமிழில் ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த ஐந்து பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருந்து, 16 பேர் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் களமிறங்கினர்.

இதில் மற்ற அனைவரும் வெளியேறி, பாலாஜி, நிரூப், தாமரை மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய 4 பேர், இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தனர்.

பிக்பாஸ் அல்டிமேட் பட்டம்

கடைசியில், 35 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் தமிழின் முதல் பிக்பாஸ் அல்டிமேட் பட்டத்தை தட்டிச் சென்றார் பாலாஜி. இவர் நான்காவது பிக்பாஸ் சீசனில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, நிரூப் இரண்டாம் இடமும், ரம்யா பாண்டியன் மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட்டில் அனிதா

இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில், அதிகம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருந்த பெயர் என்றால் அது அனிதாவுடையது தான். நான்காவது பிக்பாஸ் சீசனில் நல்ல பெயர் எடுத்திருந்த அனிதா, அல்டிமேட் நிகழ்ச்சியிலும் முக்கியமான போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்டிருந்தார்.

niroop called anitha and she shares in instagram

மேலும், நிரூப்புடன் தான் அல்டிமேட் வீட்டில் அனிதா அதிக நேரத்தினை செலவழித்து வந்தார். இருவரும் அக்கா தங்கை போல பிக்பாஸ் வீட்டிற்குள் அன்பு காட்டி வந்தனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு, நிரூப் தன்னை அழைத்து பேசியது பற்றி, இன்ஸ்டாகிராமில் அனிதா பகிர்ந்துள்ளார். "70 நாள் நட்பு. ஆனா, இப்ப தான் ஃபர்ஸ்ட் கால் வருது. முதல் தடவ போன்'ல பேசுறோம். வித்தியாசமான ஃபீலிங்கா இருக்கு" என குறிப்பிட்டு பகிர்ந்திருந்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும், நிரூப்பின் மொபைல் எண்ணைக் கேட்டு மெசேஜ் செய்துள்ளனர்.

niroop called anitha and she shares in instagram

அவற்றையும் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த அனிதா, நிரூப்பை கிண்டல் செய்யும் வகையில், சில கருத்துக்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

niroop called anitha and she shares in instagram

People looking for online information on Anitha Sampath, BB Ultimate, BB Ultimate Winner, BiggBoss Ultimate, Niroop will find this news story useful.