Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

Khushboo : "விஜய்யின் வாரிசு படத்துல நடிக்கிறீங்களா?" - குஷ்புவின் ஜாலி பதில்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு திரைப்படத்தில் தான் நடிக்கிறாரா என்பது குறித்து நடிகை குஷ்பு பேசியுள்ளார். முன்னதாக துபாய் சென்றிருந்த நடிகை குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர்.சி இருவரும் துபாயில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஐ மேக்ஸ் ஸ்கிரீனில் பார்த்ததாக பதிவிட்டு, அந்த திரைப்படத்தின் அனுபவம் குறித்தும் சிலாகித்து பேசியிருந்தனர்.

Is Khushboo acting in Vijay Varisu film here is her answer

தற்போது சென்னைக்கு வருகை தந்திருந்த நடிகை குஷ்பு, செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக மணிரத்னம் யாருமே எடுக்காத புதிய முயற்சி எடுத்திருப்பதாகவும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எவ்வளவு பேர் எடுக்க முயற்சித்தும் அதை ஒரு சவாலாக எடுத்து மணிரத்னம் இயக்கியிருக்கிறார் என்றும், திரையில் பார்ப்பதற்கு அதன் பிரம்மாண்டம் பிரம்மிக்கும் அளவில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தம்முடைய உடல் எடை குறைத்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார் குஷ்பு. அதன்படி, “லாக் டவுன் சமயத்தில் சுந்தர்.சி வாக்கிங் போனார். அவருக்கு கம்பெனி கொடுப்பதற்காகதான் நானும் வாக்கிங் சென்றேன். இருவரும் ஒர்க்கவுட் செய்தோம். அப்போது எனக்கு உடல் அளவில் மாற்றங்கள் உண்டாகின. தலைமுடி கொட்டுவது நின்றது. உடல் ஆரோக்கியம் அதிகரிக்க தொடங்குவதாக உணர்ந்தேன். இது நன்றாக இருக்கிறதே என்று அதை தொடர்ந்து செய்தேன். 22 கிலோ உடலை குறைத்தேன். தற்போது தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.

வாரிசு திரைப்படத்தில் நடிப்பதாக நான் ஒன்றும் சொல்லவில்லையே? (சிரிக்கிறார்) செட்டில் பக்கத்தில் சூட்டிங் போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் விஜய்யை சென்று சந்தித்தேன். ஏன் நன் விஜய் பட ஷூட்டிங்கில் சென்று பார்க்க கூடாதா? வாரிசு திரைப்படத்தை பற்றி நான் எதுவும் கூறவில்லை. எனக்கும் அந்த திரைப்படத்துக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய குஷ்பு, வாரிசு திரைப்படத்தில் அவர் நடிக்கிறாரா இல்லையா? என்கிற கேள்விக்கு, ஆம் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லாமல் ஜாலியாக சிரித்தபடி நகர்ந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Is Khushboo acting in Vijay Varisu film here is her answer

People looking for online information on Khushboo, Varisu, Vijay will find this news story useful.