Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

அப்போ இந்தி ரீமேக்-ல கேமியோ Role.. இப்போ இந்தி-ல ஒரு மாஸ் படம்! நெகிழும் அட்லி ரசிகர்கள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லியின் Throwback படக்காட்சி புகைப்படங்கள் ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

Jawan Director Atlee Doing Cameo in 3 Idiots Remake Nanban

Also Read | “பொன்னியின் செல்வன்” படம் பாத்துட்டு ஷங்கர் புகழாரம்.! என்ன சொல்லிருக்காரு பாருங்க..

தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. விஜய் நடிப்பில் 'பிகில்' படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிலநாட்களுக்கு முன் வெளியானது.

அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பையில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

Jawan Director Atlee Doing Cameo in 3 Idiots Remake Nanban

இப்படத்திற்கு 'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் & டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிக்கிறார். நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

Jawan Director Atlee Doing Cameo in 3 Idiots Remake Nanban

இந்த படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 2023 ஜூன் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சமீபத்தில் இன்று அட்லி தனது 36வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த விழாவில் நடிகர் விஜய், ஷாருக்கான், கீர்த்தி சுரேஷ், கதிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Jawan Director Atlee Doing Cameo in 3 Idiots Remake Nanban

இந்நிலையில் அட்லி இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது நண்பன் படத்தின் பாடலில் கேமியோ பாத்திரத்தில் தோன்றி இருந்தார். நண்பன் படம் இந்தியில் வந்த 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். அப்போது இந்தி ரீமேக் படத்தில் கேமியோ பாத்திரத்தில் நடித்த அட்லி, தற்போது இந்தியில் சூப்பர் ஸ்டாராக உள்ள ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தினை இயக்கி வருகிறார். இந்திய சினிமாவில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ஜவான் படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அட்லி ரசிகர்கள் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் நெகிழ்ந்து வருகின்றனர்.

Also Read | தமிழ் சினிமா வசூல் சாதனைகளை அமெரிக்காவில் முறியடித்த PS1! இம்புட்டு கோடியா?

தொடர்புடைய இணைப்புகள்

Jawan Director Atlee Doing Cameo in 3 Idiots Remake Nanban

People looking for online information on Atlee, Atlee in Cameo Role, Jawaan, Nayanthara, Shah Rukh Khan will find this news story useful.