Maha
www.garudabazaar.com

சந்திரமுகி-2 படத்துல ஹீரோயின் இவங்களா? ஆஹா அப்போ வேறலெவல் சம்பவம் கன்பார்ம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Lakshmi Menon Doing a Lead Role in Chandramukhi 2

Also Read | சாய் பல்லவி நடித்த கார்கி படத்தின் சேட்டிலைட் உரிமம்.. கைப்பற்றிய பிரபல டிவி சேனல்!

நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ராகவா லாரன்ஸ்  கதையின் நாயகனாக நடிக்க, 'வைகை புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது.

Lakshmi Menon Doing a Lead Role in Chandramukhi 2

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில்  'சந்திரமுகி 2'  திரைப்படத்தை தயாரிக்கிறார். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

Lakshmi Menon Doing a Lead Role in Chandramukhi 2

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது. இப்படத்தில் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குச்சுப்புடி நடன கலைஞரான லட்சுமி மேனன் சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதாக வரும் தகவல்கள்  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lakshmi Menon Doing a Lead Role in Chandramukhi 2

Also Read | அடடே நஸ்ரியா நடத்துன போட்டோஷூட்.. அதுலேயும் ரசிகர்களிடம் அவங்க கேட்ட கேள்வி செம ஹைலைட்!

தொடர்புடைய இணைப்புகள்

Lakshmi Menon Doing a Lead Role in Chandramukhi 2

People looking for online information on Chandramukhi 2, Lakshmi menon, Raghava Lawrence will find this news story useful.