'பரியேறும் பெருமாள்' படத்துக்கு மேலும் ஒரு கௌரவம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பில் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கிய படம் 'பரியேறும் பெருமாள்'. இந்த படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

Ranjith and Mariselvaraj Pariyerum Perumal Got 3 awards from Toulouse Indian Film Festival in France

கடந்த வருடம் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பல்வேறு விருது விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வாங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பிரான்ஸில் நடைபெற்ற டௌலூஸ் இந்தியன்  ஃபிலிம் பெஸ்டிவல் (Toulouse Indian Film Festival)விழாவில் கலந்துகொண்டு இண்டிபெண்டன்ட் கிரிட்டிக் விருது, ஜூரி விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளது.