‘பரியேறும் பெருமாள்’ ரீமேக்: ஹீரோ யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் நடிகர் கதிர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் ஆகவுள்ளது.

Mythreya to play lead in Pariyerum Perumal Kannada Remake

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. சாதிய பாகுபாடுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்தது.

இந்நிலையில், இப்படம் தற்போது கன்னட மொழியில் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்ட நிலையில், புதுமுக நடிகரை நடிக்க வைக்க இயக்குநர் காந்தி மணிவாசகம் திட்டமிட்டுள்ளார்.

‘களவானி மாப்பிள்ளை - 2’ திரைப்படத்தை இயக்கிய காந்தி மணிவாசகம் இயக்கவிருக்கும் இப்படத்தில் மைத்ரேயா எனும் புதுமுக நடிகரை நாயகனாக அறிமுகம் செய்யவிருக்கிறார். மைத்ரேயா, பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பரியேறும் பெருமாள்’ கன்னட ரீமேக் படத்திற்காக பெங்களூரையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுடன் பழகி, அவர்களது பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் மைத்ரேயா கற்றுக் கொண்டு வருவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விரைவில் இப்படத்தின் தொடக்க விழா பெங்களூரில் ஆரம்பமாகவுள்ளது. அதில் இப்படத்தின் ஹீரோயின், வில்லன், மற்றும் இதர கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.