அந்த சம்பவம் இன்னும் நினைவிலேயே இருக்கு - விஜய்யுடன் நடிப்பது குறித்து பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பரியேறும் பெருமாளின்' வெற்றிக்கு பிறகு கதிர் நடிப்பில் 'சத்ரு' படம் மார்ச் 8 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

Kathir shares his first meeting with vijay in Thalapathy 63

'ராட்டினம்' படத்தில் ஹீரோவாக நடித்த லகுபரன் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்க நவீன் நஞ்சுண்டான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்து. இந்நிலையில் இந்த படம் குறித்தும், அடுத்த தான் விஜய்யுடன் நடிக்கவிருக்கும் 'தளபதி 63'படம் குறித்தும் Behindwoods தளத்துக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ''விஜய் கூட நடிப்பேன் என்பது நான் நினைத்து பார்க்க்கூட முடியாத விஷயம்.  அதனால் அத பத்தி எதுவும் யோசிக்கவில்லை.

விஜய் சார் மீட் பண்ணும் போது ரொம்ப நன்றினா. மறக்க முடியாத தருணம் இது. என்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை என்றேன். அந்த சம்பவம் இன்னும் நினைவிலேயே இருக்கிறது'' என்றார்.

அந்த சம்பவம் இன்னும் நினைவிலேயே இருக்கு - விஜய்யுடன் நடிப்பது குறித்து பிரபல நடிகர் வீடியோ