மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடித்து கடந்த வருடம் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதிரின் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
இதனையடுத்து கதிர் நடித்துள்ள படம் சத்ரு. இந்த படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற மார்ச் 8 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
கதிர் போலீஸாக நடித்துள்ள படத்தை நவீன் நஞ்சுண்டான் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் சில நிமிட காட்சிகள் யூடியூபில் வெளியாகியுள்ளது.
கதிரின் 'சத்ரு' படத்திலிருந்து வெளியான சில நிமிட காட்சி இதோ! வீடியோ