'உன்னைப் போல் ஒருவன்', 'பயணம்', 'வெடி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூனம் கவுர். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அவரது கேரக்டருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சில யூடியூப் சேனல்கள் செய்தி வெளியிடுவதாக தெரிவித்தார்.
மேலும் சில டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்கள் மீதும் இத்தகைய புகாரை அவர் அளித்துள்ளார். இத்தகைய சேனல்கள் தன் மீது பாதகமான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.