'இந்தியன் 2' விபத்து குறித்து பிரபல இயக்குநர் வருத்தம் - ''இந்த விஷயங்கள்லாம் பயமுறுத்துது''
முகப்பு > சினிமா செய்திகள்லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தற்போது சென்னை இவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும் 10 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணாவும் ஒருவர் என்றும் கிருஷ்ணா இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கலும், வருத்தமும் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சில்லுக்கருப்பட்டி பட இயக்குநர் ஹலிதா தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஷூட்டிங்கில் பயன்படுத்தப்படும் லைட்ஸ் கிரேன், உலோகங்களால் ஆன பெரிய பள்ளி ஆண்டு விழாவிற்கு பயன்படுத்தப்படும் மேடை ஆகியவை பயமுறுத்துகின்றன. இந்த மாதிரி கிரேன்களை பயன்படு்தும் போது தர ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்'' என்றார்.
Lights mounted on industrial crane during shoots,aluminium frame truss/ huge metal framed,stage for children during annual day functions are scary! There’s need for inspection & QC while handling &erecting such giant of a heavy metal.Feeling terribly sorry for the departed souls pic.twitter.com/yl86q9hyUp
— Halitha (@halithashameem) February 20, 2020