'இந்தியன் 2' படப்பிடிப்பில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் இறந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் லைக்கா புரொடக்ஷன் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிட்டி போலீஸ் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகின்றனராம். இதனையடுத்து Behindwoods தரப்பில் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் தொடர்பு கொண்ட போது இறந்தவர்களின் உடல்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் கிரேன் ஆபரேட்டர் ராஜன் தலைமறைவாக உள்ளதாகவும், நசரேத்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் கூறப்படுகிறது. கிரேன் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் அது பற்றியும் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.