www.garudabazaar.com

bigg boss 6 tamil : "பாலாஜி மாரியே இருக்காருப்பா".. ராபர்ட் அடித்த கமெண்ட்.. கடுப்பான போட்டியாளர்.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ram ramaswamy reaction for robert comment bigg boss 6 tamil

Also Read | BB6 Tamil : அசல் கோலாரை பாத்து ஆயிஷா சொன்ன வார்த்தை??.. 2வது நாளுலேயே கண்ணீர் விட ஆரம்பிச்சுட்டாங்க!!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

ram ramaswamy reaction for robert comment bigg boss 6 tamil

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ram ramaswamy reaction for robert comment bigg boss 6 tamil

இதில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், சொன்னதற்கு கிரிக்கெட் வீரரும் மாடலுமான ராம் ராமசாமி லைட்டாக டென்ஷன் ஆகியுள்ளார்.

முன்னதாக மிகுந்த பயந்த சுபாவத்துடன் பிக்பாஸ் வீட்டில் காலடி எடுத்து வைத்த ஜிபி முத்து, இரவில் போர்வை போர்த்திக் கொண்டு தூங்கிய படி இருக்க, ராபர்ட் மாஸ்டர் கீழே பதுங்கி இருந்த படி, போர்வையை இழுக்க, இதனை அறிந்ததும் ஒரு நிமிடம் பதறிப் போன ஜிபி முத்து கட்டிலில் இருந்து கீழே உருண்டு விழுந்துவிட்டார். பின்னர் சக போட்டியாளர்கள் அவரை வந்து எழுப்பி தேற்ற அங்கு முழுவதும் சிரிப்பலையும் உருவானது,

ram ramaswamy reaction for robert comment bigg boss 6 tamil

இந்நிலையில்தான், ராம் ராமசாமியை பார்த்து, ‘பார்க்கதான் இவர் பிரபாஸ் மாதிரி இருப்பார். ஆனா முகத்த பார்த்தா பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட முன்னாள் போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் மாதிரியே இருக்காரு’ என டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் கூற, உடனே லைட்டாக டென்ஷன் ஆன ராம், இந்த மாதிரி கம்பேர் பண்ணாதீங்க என சற்றே கோப தொனியில் கூறுவதாக தெரிகிறது. பிக்பாஸ் தமிழின் 4வது சீசனில் கலந்துகொண்டவர் பாலாஜி முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | PS1 : "த்ரிஷா மாதிரி இருக்கா.. குந்தவை இவதான்!".. 10 வருடம் முன்பே ராஜேஷ் குமார் கதையில் சுவாரஸ்யம்.!

BIGG BOSS 6 TAMIL : "பாலாஜி மாரியே இருக்காருப்பா".. ராபர்ட் அடித்த கமெண்ட்.. கடுப்பான போட்டியாளர்.? வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ram ramaswamy reaction for robert comment bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Ram ramaswamy, Robert master will find this news story useful.