Bigg Boss 6 Tamil : த்ரிஷாவாக ஆசைப்பட்ட ஜனனி.. "த்ரிஷாவுக்கு போட்டி வந்தாச்சு" - மேடையில் கலகலத்த கமல்.!
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுள் தொகுப்பாளினி ஜனனிக்கு ஆர்மி உருவாகியுள்ளதாக இணையதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஜனனி குணசீலன் என்கிற இவர் குறித்த அறிமுகத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாளன்று விஜய் டிவி ஒளிபரப்பியது. அதில் பேசிய இவர்., “நான் ஜனனி குணசீலன், இலங்கையின் டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன், அத்துடன் இலங்கையில் மாடலிங் பண்ணிக் கொண்டிருந்தேன். நான் பாரம்பரிய லுக்கில் ஃபோட்டோஷூட்களை செய்ய விரும்புவேன்.எனக்கு கிளாசிக்கல் டான்ஸ் மிகவும் பிடிக்கும். பிக்பாஸ் எனும் பெரிய தளத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள இருக்கிறேன். பிக்பாஸில் நான் யாருக்காகவும், நான் என்னை மாற்றிக்கொள்ளவோ, விட்டுக்கொடுக்கவோ மாட்டேன்,. வெற்றி அடைவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் நடிகர் கமல்ஹாசனுடன் பேசும்போது, “சின்ன வயசுல இருந்து யாராச்சும் என்ன ஆவேன்னு கேட்ட மத்தவங்க எல்லாம், டாக்டர், டீச்சர் என சொல்வார்கள். ஆனால் நான் த்ரிஷா ஆக வேண்டும் என்றுதான் சொன்னேன். எனக்கு நடிப்புதான் ஆர்வமாக இருந்தது. டிவி, திரை மீதுதான் ஈடுபாடு உண்டானது” என்று ஜனனி குறிப்பிட்டார். அதற்கு கமலோ, “நான் த்ரிஷாவிடம் சொல்கிறேன்,.. உங்களுக்கு போட்டியாக ஒரு பெண் வந்திருக்கார் என்று” என தனக்கே உரிய பாணியில் கலகலத்தார்,.
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- JANANY 😍 BIGG BOSS 6 வீட்டில் கொஞ்சும் குரலில் முதல் நாளே இளசுகளை கவர்ந்த இந்த இலங்கை அழகி யார்?
- GP MUTHU Voice-ல பேசி அசத்திய AMUDHA VANAN 😱 எலேய், அப்படியே பேசுற நீ
- இவர பிரிஞ்சதே இல்ல 😢😥 மேடையில் கண்ணீர் விட்ட GP Muthu மனைவி, BB 6
- அண்ணா, BIGG BOSS 6 வீட்டுல யார்கிட்டயும் சண்டை போடாத 😍 VIDEO CALL ல WARNING கொடுத்த AISHWARYA
- GP MUTHU வை வச்சு செஞ்ச KAMAL 🤣😂 என்ன வீட்டுக்கு அனுப்பி விடுங்க என கதறிய GP MUTHU 🤣 மொரட்டு FUN