PS1 : "த்ரிஷா மாதிரி இருக்கா.. குந்தவை இவதான்!".. 10 வருடம் முன்பே ராஜேஷ் குமார் கதையில் சுவாரஸ்யம்.!
முகப்பு > சினிமா செய்திகள்அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
Also Read | BB6 Tamil : அசல் கோலாரை பாத்து ஆயிஷா சொன்ன வார்த்தை??.. 2வது நாளுலேயே கண்ணீர் விட ஆரம்பிச்சுட்டாங்க!!
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
செப்டம்பர் 30-ஆம் தேதி உலகமெங்கும் பல மொழிகளில் லைகா வெளியிட்ட இந்த திரைப்படம் குறித்து பலரும் தொடர்ச்சியாக பேசிவந்தனர். ராஜ ராஜ சோழ பேரரசனின் சோழ சாம்ராஜ்ஜியத்தை தழுவி உருவாக்கப்பட்ட வரலாற்று புனைவு கதையான இக்கதையை பலவரும் தமிழ் சினிமா எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.
இதில் த்ரிஷா நடித்த குந்தவை கேரக்டருக்கும், ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கேரக்டருக்குமான நேருக்கு நேரான மோதல், படத்தில் இன்னொரு முக்கிய அம்சமாக இருக்கும். சோழ இளவரசர்களின் சகோதரியான குந்தவை கேரக்டரில் த்ரிஷா நடித்திருந்தார்.
இந்நிலையில், த்ரிஷா இந்த கேரக்டரில் பொருந்துவது குறித்து 10 வருடம் முன்பே தமது கதையில் எழுதியுள்ளதாக பிரபல நாவலாசிரியர் ராஜேஷ் குமார் தம் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு, த்ரிஷா மற்றும் குந்தவை கேரக்டர் தொடர்பு படுத்தப்படும் அந்த பாராவையும் பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
Also Read | "யாருலே தூங்கும்போது காலை பிடிச்சு இழுக்குறது".. GP முத்துவிற்கு பயம் காட்டிய ராபர்ட் மாஸ்டர்..!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg Boss 6 Tamil Janani Wanted To Become Trisha, Kamal Comment
- Ponniyin Selvan Making Cinematographer Shares A Video
- Ladies Watched Ponniyin Selvan Movie With Characters Getups
- Director Mohan G Talks About Raja Raja Chozhan Ponniyin Selvan
- Ravi Varman ISC About Ponniyin Selvan PS1 Success Reason
- Ponniyin Selvan PS1 Crossed 300 Crore Box Office Collection
- Parthiban Kanavu Also Have Has Kundavai Like Ponniyin Selvan
- Rajinikanth Phone Call To Ponniyin Selvan Karthi
- Ponniyin Selvan Tamilnadu Box Office Collection Official
- Shalini Ajith Anoushka Watched Ponniyin Selvan Movie In Sathyam Cinemas
- Ponniyin Selvan Jayam Ravi First Film Is Not Jayam Here Is Answer
- Kamal Haasan Will Watching Ponniyin Selvan Movie In IMAX 3D With PS1 Cast
தொடர்புடைய இணைப்புகள்
- JAYAM RAVI-ய Follow பண்ண போது தவறி விழுந்த CAMERA MAN... PONNIYIN SELVAN SHOOTING SPOT
- RAJINI🔥Thalaivar-அ பாத்து உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு😍Birthday Surprise To VARALAXMI SARATHKUMAR
- SARATH பழுவேட்டையரா ரொம்ப கம்பீரமா இருந்தீங்க 🔥🔥 வீட்டுக்கு அழைத்து SPECIAL COFFEE கொடுத்த RAJINI
- PS Dialogue-அ இப்படி சல்லியா நொறுக்கிட்டீங்களே பா 🤣 Recreation Fun Video 🤣 Aditya Karikalan
- "PONNIYIN SELVAN மேல வெறுப்பு வந்ததுக்கு.." MOHAN G காரசார SPEECH | PS 1, Vetrimaaran Controversy
- TRISHA 😍 "குந்தவை FANS என்ன மன்னிச்சிடுங்க" 🤣😂 Ponniyin Selvan Kundavai ஆக மாறிய Nanjil Vijayan |
- "நான் தான் NANDHINI Character பண்ணனும்னு நினச்சேன், ஆனா"... MEENA About PONNIYIN SELVAN
- "Vetrimaaran சொன்னது பத்தி எனக்கு எதுக்கு?" 😡 கடுப்பான Sarath Kumar
- LIVE DEMO: அடடா இந்த Horse அப்படியே செத்த மாதிரி நடிக்குது 😱 PS, Indian 2, Pathu Thala HORSE TRAINER
- Ponniyin Selvan சென்ற இலங்கை பாதை 🔥 LIVE-ஆ பார்க்க சென்ற @Rj Chandru Vlogs நடந்த விசித்திர அனுபவம்
- Ponniyin Selvan Book படித்தவர்களுக்கு Challenge.. Kalki எழுத போன Real Locations உங்களுக்கு தெரியுமா?
- Ponniyin Selvan Grand Set Making Video & Secrets Revealed By The Legend Thota Tharani, Art Director