www.garudabazaar.com
iTechUS

'BOYS உங்க உடம்ப ரெடி பண்ணுங்க'.. #Suriya42 -க்காக சூர்யா தெறி வொர்க் அவுட்.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி இருந்தது. அதே போல, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளியான 'விக்ரம்' திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சூர்யா.

Suriya heavy work out for Suriya42 movie video viral

Images are subject to © copyright to their respective owners

இதற்கிடையில், சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வாங்கி இருந்தார் சூர்யா. இதனைத் தொடர்ந்து, சூர்யா அடுத்து நடித்து வரும் படத்தின் மீது தான் அனைவரின் பார்வையும் உள்ளது. "Suriya 42" என குறிப்பிடப்பட்டுள்ள படத்தில் தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் சிவா இந்த படத்தை இயக்கி வரும் நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

சூர்யாவுடன் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார். வசனங்களை மதன் கார்க்கி எழுதுகிறார். இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிந்துள்ளார். சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிந்து வரும் சூழலில், மிலன் கலை இயக்குனராகவும், எடிட்டராக நிஷாத் யூசுப்பும் பணிபுரிகின்றனர்.

Suriya heavy work out for Suriya42 movie video viral

Images are subject to © copyright to their respective owners

Suriya 42 படத்தின் மோஷன் போஸ்டர் முன்பே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், சூர்யா 42 திரைப்படம் படம் 10 மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  3டி தொழில்நுட்பத்தில் படம் உருவாகி வருகிறது. இதனிடையே, சமீபத்தில் நடிகை திஷா பட்டாணி சண்டைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

 

இந்த நிலையில், Suriya 42 படத்திற்காக நடிகர் சூர்யா தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. "கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புள்ள மனிதன் சூர்யா அண்ணா" என்றும் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya heavy work out for Suriya42 movie video viral

People looking for online information on Disha Patani, Siruthai Siva, Suriya, Suriya 42 will find this news story useful.