முதல்முறையாக குழந்தையின் முகத்தை காட்டிய சின்னத்திரை தம்பதி... வாழ்த்தும் ரசிகர்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனாவால் நாளுக்கு நாள் சோக செய்திகள் அதிகரித்து வரும் அதே வேளையில் சில நல்ல செய்திகளும் மக்களை சந்தோஷப்படுத்துகிறது. அப்படி ஒரு நல்ல செய்திதான் இது. பிரபல தொலைக்காட்சி ரியல் ஜோடியான ஸ்மிர்தி கண்ணாவுக்கும், கெளதம் குப்தாவிற்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த ஜோடிக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

இப்போது முதன் முதலாக தங்கள் குழந்தையின் முகத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் "இந்த நாளை நான் எப்போதும் மறக்க மாட்டேன். என்னை தாயாக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. கடைசி மூச்சு வரை உன்னை காப்பேன்" என்று மகிழ்ச்சியாக தலைப்பிட்டுள்ளார். இருவரும் பிரபல கலர்ஸ் தொலைக்காட்சி நடத்திய Meri Aashiqui Tumse Hi நிகழ்ச்சியில் பங்கேற்று காதல் வயப்பட்டனர். பின்பு இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.