ரஜினி பர்த்டே ட்ரீட் - 3டியில் மீண்டும் வெளியாகும் மெகா ஹிட் திரைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஒன்று 3டியில் வெளியிடுவதாக பிரபல திரையரங்கு மேலாளர் தெரிவித்துள்ளார்.

Rajini's mega hit film is to be rereleased in 3D on his birthday in GK Cinemas.

2007ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர், ரஜினியின் கூட்டணியில் உருவான சிவாஜி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க கே.வி.ஆனந்த ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த திரைப்படம் நவீன தொழில்நுட்பம் மூலம் 3டி வடிவத்துக்கு  மாற்றப்பட்டுள்ளது.

இது வரும் டிசம்பர் 12ம் தேதி மாலை 7 மணிக்கு சென்னை போரூரில் உள்ள ஜிகே சினிமாஸ் திரையரங்கில் வெளியிடப்படும் என அத்திரையர்ங்கின் எம்டி ரூபன் மதிவாணன் தெரிவித்துள்ளார்.