'லாக்டவுன் முடிஞ்சா, ஆடுவேன் பாருங்க ஒரு டான்ஸ்..' - ரஜினி பட நடிகையின் வைரல் டான்ஸ் வீடியோ.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ஹூமா குரேஷி வெளியிட்டுள்ள புதிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ஹூமா குரேஷி. இவர் நடித்த கேங்ஸ் ஆஃப் வசேப்பூர், பத்லாபூர், ஹைவே உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதையடுத்து இவர் தமிழில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். மேலும் இவர் லீலா எனும் வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ''இந்த ஊரடங்கு முடிந்துவிட்டது என்று சொன்னால், நான் இப்படிதான் ஆடுவேன். எப்போது அந்த கால் வருமோ..?!" என பதிவிட்டுள்ள அவர், அதற்கு ரொம்பவே ஜாலியாக ஆடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். ஹூமா குரேஷியின் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.
Tags : Huma Qureshi, Rajinikanth, Kaala, Lockdown, Dance Video