நடிகர் நவாசுதின் சித்திக்கின் மனைவி கொடுத்துள்ள டைவர்ஸ் நோட்டீஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் மிகச் சிறந்த நடிகராக புகழப்படுபவர் நவாசுதின் சித்திக். இவர் நடித்த கேங்ஸ் ஆஃப் வசேப்பூர், லன்ச் பாக்ஸ், மண்ட்டோ உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார்.
இந்நிலையில் நவாசுதின் சித்திக்கின் மனைவி ஆலியா சித்திக், அவருக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த காரணம் எதுவும் கூறப்படாத நிலையில், இந்த டைவர்ஸ் நோட்டீஸுக்கு நவாசுதின் தரப்பில் இருந்து பதிலும் இல்லையாம். 15 நாட்களில் எந்த பதிலும் இல்லையென்றால், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளாராம் நடிகரின் மனைவி.