இமான் தேடும் பாடகர் : 'அடுத்து இவர்களை கண்டுபிடித்து கொடுங்கள்...!' அண்ணாத்தை ப்ளானிங்கா..?!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இணையத்தில் வைரல் ஆகி வந்த பாடகரை பாட வைக்கும் முயற்சியில் இமான் இறங்கியுள்ளார்.

வைரல் ஆன பாடகரை இமான் தேடுகிறார் | rajini's annaatthe musician immaan tries to find the viral singer

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இமான். சமீபத்தில் இவர் இசையமைத்த கடைக்குட்டி சிங்கம், விஸ்வாசம், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பெற்றன. இதையடுத்து இமான் தற்போது இசையமைத்து வரும் திரைப்படம் அண்ணாத்த. ரஜினி நடிக்கும் இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இமான் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அண்மையில் பெயின்டர் ஒருவர் எஸ்.பி.பி போல பாடிய வீடியோ ஆன்லைனில் ட்ரென்ட் ஆனது. அதே போல கேரளாவை சேர்ந்த ராகேஷ் என்பவர் விஸ்வரூபம் படத்தில் வரும் உன்னை காணாத பாடலை அப்படியே பாடினார். இருவரின் போட்டோவையும் பதிவிட்டு, இந்த பாடும் திறமைகளை கண்டறிய உதவுங்கள் நண்பர்களே' என தெரிவித்துள்ளார். இமான் இசையமைத்த கண்ணான கண்ணே பாடலை பாடி வைரல் ஆன கண்பார்வையற்ற திருமூர்த்தி என்பவரை தனது சீறு படத்தில் பாட வைத்தார் இமான். அதே போல இவர்களையும் கண்டறிந்து பாட வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் இமான் இருக்கிறார். அது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் பாடலாக கூட இருக்கலாம் என எதிர்ப்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

Entertainment sub editor