அண்ணாத்த ரஜினியுடன் நான்... இப்போ ஒரே ஒரு ஆசை... நிறைவேறுமா.? - லாரன்ஸின் செம ஃப்ளாஷ்பேக் இது.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினியின் அண்ணாத்த படத்தின் பெயர் வெளியிடப்பட்டதையடுத்து, நடிகர் லாரன்ஸ் செம போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ரஜினியுடன் லாரன்ஸின் புகைப்படம் | lawrence shares his pic with annaatthe rajini

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கும் இத்திரைப்படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இமான் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்து வருகிறார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் நேற்று வெளியானது. இதையடுத்து அண்ணாத்த சமூக வலைதளங்களில் ட்ரென்ட் அடித்தது. இதனிடையே ரஜினியுடன் லாரன்ஸ் எடுத்த பழைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'நம்ம அண்ணாத்தையுடன் இருக்கும் இந்த புகைப்படம் நான் க்ரூப் டான்சராக இருந்த போது எடுத்தது. இப்போது ஒரு சின்ன சீனில் அவருடன் நடிப்பதே என் ஆசை' என அவர் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor