இந்த ரோல்ல நடிச்சாங்களா? பிரபல இயக்குநரின் மனைவி நடித்துள்ள படங்கள் இவைதான்!
முகப்பு > சினிமா செய்திகள்கார்த்திக் சுப்பராஜின் மனைவி சத்யா பிரேமா 'பேட்ட' படத்தில் சிறிய காட்சியில் தோன்றியுள்ளார் என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். ரஜினிக்கு இண்டர்வ்யூ லெட்டர் கொடுக்கும் அந்தப் பெண்ணை நினைவிருக்கிறதா? சத்யாதான் அது.

ஆனால் இதற்கு முன்பே சத்யா தன் கணவர் இயக்கத்தில் ‘இறைவி’ படத்திலும் நடித்துள்ளார் என்பது பலருக்குத் தெரியாது. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இறைவியில் கமலினி முகர்ஜியின் தோழியாக சத்யா பிரேமாவும் நடித்துள்ளார்.
சினிமா மீது கார்த்திக் சுப்பராஜுக்கு இருக்கும் ஈடுபாட்டுக்கு அவரது மனைவி சத்யா எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறார். பிட்சா படத்தில் ரம்யா நம்பீசனின் கதாபாத்திரத்தில் தன் மனைவியின் பாதிப்பு பெருமளவு உள்ளது என்பதை ஒரு நேர்காணலில் கார்த்திக் தெரிவித்திருந்தார்.
தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ஜகமே தந்திரம் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ் அவர். இப்படத்தின் முக்கியமான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்று பிரச்னைகளால் படத்தின் அடுத்த கட்ட வேலைகள் முடங்கி உள்ளது. இந்தப் படம் தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கார்த்திக் சுப்பராஜின் ரசிகர்களும் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஜகமே தந்திரம் படத்தில் திருமதி கார்த்திக் சுப்பராஜின் பங்கு என்ன என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.