www.garudabazaar.com

BREAKING: அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்த ரஜினி - நெல்சன் சேரும் புதிய படம்! "சூப்பர்" அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : ரஜினிகாந்த் - நெல்சன் இணையும் புதிய படத்தின் சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.

Rajinikanth Next Movie with Nelson Breaking Update

"ஆளுநரின் செயல் தமிழக மக்களுக்கு எதிரானது" - நீட் விவகாரத்தில் கொந்தளித்த பா. ரஞ்சித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பதே தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கேள்வி ஆகும். முன்னணி இயக்குனர்களான பாண்டி ராஜ், சிறுத்தை சிவா, கே. எஸ் ரவிக்குமார், பால்கி ஆகியோர் பெயர் பரவலாக ரசிகர்கள் மத்தியில் அடிபட்டது. இதில் எச். வினோத், லோகேஷ் கனகராஜ் பெயரும் சிலகாலம் சுற்றின.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக பேச்சுவார்த்தை துவங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

Rajinikanth Next Movie with Nelson Breaking Update

பேச்சுவார்த்தை எல்லாம் நல்லபடியாக முடிந்தால் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் துவங்கும் என்று தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் இந்த புதிய படத்திற்காக சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்திற்கு மேக்கப் லுக் டெஸ்ட் நடந்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாராங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதில், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, கலை இயக்குனர் கிரண், உடையலங்காரம் - பல்லவி ஆகியோர் பங்கு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் பற்றிய அறிவிப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanth Next Movie with Nelson Breaking Update

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.  இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்தனர். டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை பெற்றுள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்! வலிமை படம் போலவே BEAST படத்திலும் இது இருக்காம்!

 

BREAKING: அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்த ரஜினி - நெல்சன் சேரும் புதிய படம்! "சூப்பர்" அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Next Movie with Nelson Breaking Update

People looking for online information on நெல்சன், ரஜினிகாந்த், Nelson, Rajinikanth will find this news story useful.