”ஒரு மகத்தான நாள்… What a Man” சூப்பர் ஸ்டாரை சந்தித்த பின் ‘டான்’ இயக்குனரின் வைரல் Pics!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

Director cibi chakravarthi viral pic with Rajinikanth

Also Read | பிங்க் சேலையில் கீர்த்தி சுரேஷ் செம்ம HOT போட்டோஷூட்.. ரசிகர்களை கவர்ந்த போட்டோஸ்

டான்…

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றியவர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படம் மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Director cibi chakravarthi viral pic with Rajinikanth

100 கோடி வசூல்…

‘டான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நல்ல வசூல் செய்து வருகிறது. வெளியாகி 12 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகெங்கும் திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.  இப்போதும் பல திரையரங்குகளில் ’டான்’ திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. வரும் ஜூன் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

சூப்பர் ஸ்டாரோடு சந்திப்பு….

இந்நிலையில் படக்குழுவினரை அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக ‘டான்’ படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி அவரது சமூகவலைதளப் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு இருக்கும் புகைப்படங்களப் பகிர்ந்து “ஒரு மகத்தான நாள். சூப்பர் ஸ்டாரை சந்தித்தேன். அவருடன் ஒரு மணிநேரத்துக்கும் மேல் டான் திரைப்படம், வாழ்க்கை, சினிமா பற்றி பேசியது ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று. எங்கள் படத்தைப் பற்றி “என்ன ஒரு படம்… என்ன ஒரு எமோஷன்” என அவர் கூறிய போது நாங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தோம். ‘என்ன ஒரு மனிதர்’. லவ் யூ தலைவா” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Director cibi chakravarthi viral pic with Rajinikanth

முன்னதாக டான் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயனும் ரஜினிகாந்தை சந்தித்ததைப் பற்றி புகைப்படத்தோடு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

Also Read | “ரொம்ப Emotional- ஆன கதை …” யானை Title ஏன்… இயக்குனர் ஹரியின் வைரல் Speech

தொடர்புடைய இணைப்புகள்

Director cibi chakravarthi viral pic with Rajinikanth

People looking for online information on சிபி சக்ரவர்த்தி, ரஜினிகாந்த், Cibi Chakravarthi, Super Star Rajinikanth will find this news story useful.