ரஜினிகாந்த்தின் 'தர்பார்' திரைப்படம் வாட்ஸ் அப்பில் வெளியானதா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 11, 2020 07:23 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலை முன்னிட்டு வெளியான 'தர்பார்' திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. லைக்கா புரொடக்சன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்க, சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த படம் தற்போது வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளதாக தயாரிப்பு தரப்பு சார்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் டி.சிவா, இ வாட்ஸ் அப்பில் அனுப்புபவர்களும், பார்ப்பவர்களையும் டிராக் பண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் யாரும் வாட்ஸ் அப்பில் பார்க்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
ரஜினிகாந்த்தின் 'தர்பார்' திரைப்படம் வாட்ஸ் அப்பில் வெளியானதா ? வீடியோ