ரஜினிகாந்த்தின் 'தர்பார்' மீது திடீர் சர்ச்சை - தமிழக அரசு தரப்பில் அதிரடி பதில் !
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 10, 2020 03:29 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் நேற்று முதல் (09.01.2020) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கியிருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தில் ஜெயிலிருந்து ஷாப்பிங் போகலாம் என்பது போன்ற வசனம் இடம் பெற்றுள்ளதாகவும், இது சசிக்கலாவை குறிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. இது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர் . அதற்கு பதிலளித்த அவர், அது விசாரணையில் இருக்கிறது. அதற்குள் நான் போகவிரும்பவில்லை.
பணம் பாதாளம் வரை பாயும்னு சொல்லுவாங்க. இங்க பணம் சிறைச்சாலை வரை பாய்ந்திருக்கிறது. பணம் இருந்தா என்ன வேணாம் செய்யலாம் என்று நினைப்பது தவறு என்று சொன்னது நல்ல கருத்து. திரைப்படங்களில் நல்ல கருத்து சொல்ல வேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணம்'' என்றார்.