'ரஜினிகாந்த்தின் தர்பார் படத்துல அந்த டயலாக்கை நீக்கிடுறோம்' - தயாரிப்பு தரப்பு அறிவிப்பு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 10, 2020 07:00 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கியிருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தில் ஜெயிலிருந்து ஷாப்பிங் போகலாம் என்பது போன்ற வசனம் இடம் பெற்றுள்ளதாகவும், இது சசிக்கலாவை குறிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இது குறித்து லைக்கா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அதில், ''எங்கள் தர்பார் திரைப்படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல.
இருப்பினும் இந்த குறிப்பிட்ட வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரிய வந்ததால், அது படத்தில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
#DARBAR @rajinikanth @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad #Santhanam @SunielVShetty #DarbarThiruvizha #DarbarRunningSuccessfully 💥🔥 pic.twitter.com/zj6Mcwsxu3
— Lyca Productions (@LycaProductions) January 10, 2020