சித்தார்த் படத்தின் இயக்குநர் உருக்கம் ‘வாழ்வில் அந்த நாள் வரேவேக் கூடாதென பயந்தேன்...’!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சித்தார்த் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான 'ஜில் ஜங் ஜக்’ மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் இயக்குநர் தீரஜ் வைத்தி. முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்களை சந்தித்தன. 

Siddarath Jill Jung Juk, Deeraj Vaidy shares an emotional note on his film

இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் தீரஜ் வைத்தி தற்போது முகநூலில் ஒரு பதிவிட்டுள்ளார். இதில், ‘24.12.2019 என் வாழ்வில் மறக்கவே முடியாத நாள். என் திரைப்படத்தை தரக்குறைவாக விமர்சித்து ஒரு நாளிழ் பட்டியல் வெளியிட்டிருந்தது.

இந்த கடுமையான விமர்சனம் எனக்கு மனவுளைச்சலையும் குழப்பத்தையும் தந்தது. ஆனால், இன்று ஒரு அமெரிக்க விமர்சகர் தன் பதிவில் ’ஜில் ஜங் ஜக்’ 2016ம் ஆண்டில் இந்தியாவில் வெளியான சிறந்த திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது என்னை மேலும் குழப்பமடைய செய்கிறது. இனி என் படத்தை புரிந்து கொள்ள நான் முயற்சி செய்யப்போவதில்லை. இது என் திரைப்படம் குறித்த இறுதிப் பதிவாக இருக்கும்’ என்று தீரஜ் வைத்தி தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor