பிரபல இயக்குநரின் மகன் ஹீரோவாக நடிக்கும் ரொமான்டிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பூரி ஜெகந்நாத். தெலுங்கில் இவர் இயக்கிய படங்கள் தமிழில் 'எம்.குமரன் S/O மகாலட்சுமி', 'போக்கிரி', 'அயோக்யா' என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Puri Jagannath Son Akash Puri's Romantic film to release on May 29

இந்நிலையில் இவரது மகன் ஆகாஷ் பூரி தெலுங்கில் 'ரொமான்டிக்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கெட்டிக்கா ஷர்மா நடித்துள்ளார். இந்த படத்துக்கு பூரி ஜெகந்நாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

இந்த படத்தை அனில் படுரி இயக்கியுள்ளார். பூரி கனெக்ட்ஸ் சார்பாக பூரி ஜெகந்நாத் மற்றும் சார்மி இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு சுனில் காஷ்யப் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படம் மே 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது.

Entertainment sub editor