'கல்யாணம் பண்ணிக்கோ மச்சான்.. தாங்க முடியல டார்ச்சர்..!' - இசை சுனாமிக்கு கிருஷ்ணா Request
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 28, 2019 09:17 PM
நடிகர் கிருஷ்ண நடித்துள்ள ‘கழுகு 2’ திரைப்படத்தின் ரிலீசையொட்டி, Behindwoods-க்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் வெளியான படம் கழுகு. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ‘கழுகு 2’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.
இந்த படத்தையும் சத்ய சிவாவே இயக்கியுள்ளார். இதில், கிருஷ்ணா, காளி வெங்கட், பிந்துமாதவி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள ‘கழுகு 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.2ம் தேதி ரிலீசாகிறது.
இதையொட்டி, Behindwoods-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கிருஷ்ணா, ‘தனது சினிமா பயணம் குறித்து பேசுகையில், சொந்த தயாரிப்பில் அப்பா 3 படம் தயாரித்தார் வரிசையாக தோல்வியடைந்த நிலையில், அப்பாவே சொல்லிட்டார் இதுக்கு மேல முடியாது டா எனக்கு சக்தியில்லை என்று’
‘எனக்கு தமிழ் சினிமாவில் மிகவும் பிடித்த நடிகர் தனுஷ். அவருடன் மாரி படத்திலேயே நடிக்க வேண்டியது, ஆனால் அது முடியாமல் போக மாரி 2-வில் நண்பன் கேரக்டரில் நடித்தேன். இப்போது இருவரும் குடும்பமாக பழகி வருகிறோம். மாரி கேரக்டரில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன்’ என்று கிருஷ்ணா தெரிவித்தார்.
தல ரசிகர்கள் மிகவிம் எதிர்ப்பார்க்கும் ‘பில்லா’, ‘ஆரம்பம்’ சூப்பஹிட் காம்போவான அஜித்-விஷ்ணு வர்தன் - யுவன் கூட்டணி எப்போது மீண்டும் அமையும் என்ற கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணா, ‘நானும் அண்ணனிடம் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன். அவன் எதுவுமே சொல்ல மாட்டேங்கிறான். எனக்கும் ரொம்ப ஆர்வமா இருக்கு..’ என்றார்.
இதையடுத்து, இசை சுனாமி பிரேம்ஜிக்கு ரிலேஷன்ஷிப் அறிவுரை வழங்கிய கிருஷ்ணா, ‘தயவு செஞ்சி கல்யாணம் பண்ணிக்கோ மச்சான். உனக்கு பொண்ணு தேடி தேடி நான் மட்டுமில்ல ஊரே படுற கஷ்டம் இருக்கே.. தாங்க முடியல..’ என்று கேலியாக கூறியுள்ளார்.
'கல்யாணம் பண்ணிக்கோ மச்சான்.. தாங்க முடியல டார்ச்சர்..!' - இசை சுனாமிக்கு கிருஷ்ணா REQUEST வீடியோ