தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான 'பெல்லி சூப்புலு' திரைப்படம் அந்த ஆண்டின் வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்த படத்தை தருண் பாஸ்கர் இயக்கியிருந்தார். இந்த படம் அந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கவிருக்கும் படத்தில் 'பெல்லி சூப்புலு' இயக்குநர் தருண் பாஸ்கர் முதன் முறையாக ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் முதன்மை வேடத்தில் நடிகை வாணி போஜன் நடிக்கிறார். இந்த படத்தை சென்னையைச் சேர்ந்த சமீர் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்றுவருகிறது.
வாணி போஜன் ஏற்கனவே நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் என்4( N4) என்ற படத்தில் வைபவிற்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை எஸ்ஜி சார்லஸ் இயக்குகிறார்.