www.garudabazaar.com

Breaking : Akhanda பாலகிருஷ்ணா மாதிரி களமிறங்கும் ராகவா லாரன்ஸ்.. அப்டேட்டே சும்மா அள்ளு விட வைக்குதே..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அடுத்தடுத்து முனி படத்தின் பாகங்களை உருவாக்கி, அனைத்தையும் வெற்றிப் படமாக கொடுத்திருந்தவர் பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ்.

raghava lawrence next durga fight sequence update

கடைசியாக, காஞ்சனா திரைப்படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரை வைத்து 'லட்சுமி' என்ற பெயரில் இயக்கி இருந்தார் ராகவா லாரன்ஸ்.

இதன் பிறகு, தற்போது துர்கா மற்றும் அதிகாரம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'துர்கா'

இதில், லாரன்ஸ் தற்போது நடித்து வரும் 'துர்கா' திரைப்படம் குறித்து அசத்தல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. துர்கா திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சென்னை EVP-யில் வைத்து ஏப்ரல் 20 அன்று ஆரம்பமானது. இங்கு மிகப் பெரிய சண்டைக் காட்சிகள் ஒன்றை படமாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்டமான சண்டை காட்சிகள்

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி இருந்த அகாண்டா திரைப்படத்தில் வரும் சண்டைக் காட்சிகளை போல மிகவும் பிரம்மாண்டமாக, துர்கா படத்தின் சண்டைக் காட்சிகளும் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இந்த சண்டைக் காட்சியினை பிரபல ஸ்டண்ட் இயக்குனர் 'ஸ்டண்ட்' சிவா இயக்கி வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

raghava lawrence next durga fight sequence update

People looking for online information on Akhanda, Durga, Fight sequence, Nandamuri Balakrishna, Raghava Lawrence, Stunt Siva will find this news story useful.