www.garudabazaar.com

சமூக சேவைக்காக நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ்க்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டம்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 11 ஜூலை 2022, திங்கள்: நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

actor director Raghava Lawrence recieves honorary doctorate

ராகவா லாரன்ஸ்:

தொடக்கத்தில் நடன இயக்குநராக முன்னணி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்த ராகவா லாரன்ஸ் பின்னர் தமது நடன திறமையுடன் நடிப்புத் திறமையையும் இணைத்துக்கொண்டார். ஆம், திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு முனி, காஞ்சனா, காஞ்சனா -2, காஞ்சனா-3 ஆகிய திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

ஜனரஞ்சக பொழுதுபோக்கு  திரைப்படங்கள்:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக பார்த்து ரசிக்கும்படியான ஜனரஞ்சக பொழுதுபோக்கு திரைப்படங்களாக இவரது திரைப்படங்கள் ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட், ஹாரர், சஸ்பென்ஸ் என சகல அம்சங்களுடனும் மக்கள் மத்தியில் வெற்றி அடைந்தன. காஞ்சனா படத்தை இந்தியில் லக்‌ஷ்மி என்கிற பெயரில் ரீமேக் செய்ததன் மூலம் பாலிவுட்டிலும் ராகவா லாரன்ஸ் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

actor director Raghava Lawrence recieves honorary doctorate

கௌரவ டாக்டர் பட்டம்:

நடிகர் ராகவா லாரன்ஸ் சினிமாவைத் தாண்டி ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையிலும் உதவி செய்யும் குணத்தினாலும் அவர் பெருவாரியான மக்களின் பேராதரவுக்குரியவராய் மாறியுள்ளார். இந்த நிலையில் தான், நடிகர் ராகவா லாரன்சின் சமூக சேவைகளை கௌரவிக்கும் பொருட்டு அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கௌரவ டாக்டர் பட்டத்தினை சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் இணைந்து அவருக்கு வழங்கியுள்ளனர்.

பெற்றுக்கொண்ட தாயார்:

actor director Raghava Lawrence recieves honorary doctorate

தற்போது ருத்ரன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் இருப்பதால், அவரது சார்பில், இந்த டாக்டர் பட்டத்தை அவரது தாயார் பெற்றுக்கொண்டார். தாம் ஆற்றும் தொண்டுக்காக ராகவா லாரன்ஸ்க்கு வழங்கப்பட்டுள்ள இந்த டாக்டர் பட்டத்தை தொடர்ந்து லாரன்ஸின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மனமார்ந்த நன்றி:

இதுகுறித்து நன்றி தெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ், “சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்த கௌரவத்தை எனக்கு வழங்கியதற்காக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலுக்கு மனமார்ந்த நன்றி. என் சார்பாக என் அம்மா இந்த பட்டத்தை பெற்றுக்கொண்டது எனக்கு கூடுதல் சிறப்பான விஷயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

actor director Raghava Lawrence recieves honorary doctorate

படங்களில் படு பிஸி:

தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன், அதிகாரம் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதேபோல் நடிகர் சூப்பர் ஸ்டார் நடித்து ஹிட் அடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | பிரபல பாலிவுட் நடிகையுடன் விக்கி - நயன்.. இணையத்தில் Trend ஆகும் ஃபோட்டோ!!

தொடர்புடைய இணைப்புகள்

actor director Raghava Lawrence recieves honorary doctorate

People looking for online information on Raghava Lawrence will find this news story useful.