அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் 'தளபதி 63'. இந்த படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் பிளாஸ்பேக் காட்சிகள் தற்போது ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 3 வது வாரம் வரை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே எங்களுக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தில் விஜய், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், இரண்டு விஜய்யும் அப்பா - மகன் ஒரே காட்சியில் தோன்றுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் மகன் விஜய்யின் பெயர் பிகில் என்றும் கூறப்படுகிறது.