www.garudabazaar.com

மூன்று தலைமுறைகள்.. தந்தை மற்றும் மகனுடன் நடிகர் மாதவன்.. செம்ம வைரல் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய திரை உலகில் பிரபல நடிகராக அறியப்படும் மாதவன் தமிழில் அலைபாயுதே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

R Madhavan Shared His Father Latest Look Photos

அதன் பிறகு மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டாள், ரன், அன்பே சிவம், பிரியமான தோழி, ஆய்த எழுத்து,தம்பி, எவனோ ஒருவன், யாவரும் நலம் என பல திரைப்படங்களில் நடித்த மாதவன் ஒரு லவ்லி பாய் ஹீரோவாக தமிழகம் முழுவதும் திரை ரசிகர்களை ஈர்த்தார் மாதவன். தமிழ் மட்டுமல்லாது 3 இடியட்ஸ், ரங்தே பசந்தி உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

சில வருடங்கள் தமிழில் பிரேக் எடுத்துக் கொண்ட நடிகர் மாதவன் பிறகு தமிழில் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மாஸ் கம் பேக் கொடுத்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ராக்கெட்ரி : நம்பி விளைவு என்கிற திரைப்படத்தை இயக்கிய நடித்து இருந்தார். தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

R Madhavan Shared His Father Latest Look Photos

இந்நிலையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை மாதவன் பதிவிட்டுள்ளார். அதில், தமது தந்தை மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, "உங்களை உங்கள் தந்தை உங்கள் திரைப்படத்தின் ஒரு கதாபாத்திர தோற்றத்திற்காக அவருடைய தலைமுடியில் பரிசோதனை செய்ய  அனுமதித்த தருணம் ❤️❤️😘😘. 🤣🤣🤣🙏🙏🙏 Hair -he-hair-hai" என மாதவன் பதிவிட்டுள்ளார்.

Tags : R Madhavan

தொடர்புடைய இணைப்புகள்

R Madhavan Shared His Father Latest Look Photos

People looking for online information on R Madhavan will find this news story useful.