www.garudabazaar.com

"ராஜமௌலி இயக்கும் அடுத்த படம் இப்படி தான் இருக்கும்".. MM கீரவாணி கொடுத்த சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராஜமௌலி.

MM Keeravani Talks about Mahesh Babu Rajamouli New Film

ராஜமௌலியின் மூன்று படங்களான பாகுபலி (2015), பாகுபலி- 2 (2017), மற்றும் ஆர்ஆர்ஆர் (2022) ஆகியவை இன்று வரை இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த மூன்று படங்களுமே அவை வெளியான நேரத்தில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தியப் படங்கள்.

மூன்று தேசிய திரைப்பட  விருதுகளை பெற்ற ராஜமௌலி ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஜூனியர் என்டிஆர் நடித்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. ஜூனியர் என்டிஆர் நடித்து ஹிட் அடித்த முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சிம்ஹாத்ரி படத்தினை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளியது. தமிழில் விஜயகாந்த் நடிப்பில் கஜேந்திரா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது படமாக நிதின் நடிப்பில் Sye படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றி பெற்றது. அடுத்து பிரபாஸ் நடிப்பில் சத்ரபதி படத்தை இயக்கினார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தெலுங்கு சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உருவெடுத்தது. ஐந்தாவது படமாக விக்ரமர்குடு படத்தை ரவி தேஜா நடிப்பில் இயக்கினார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தமிழில் கார்த்தி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளிவந்த சிறுத்தை படத்தின் மூலம் இந்த படம் தான். ஆறாவது படமாக எமடோங்கா படத்தை ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்கினார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளியது. தெலுங்கு சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உருவெடுத்தது.

2009-ல் ராம்சரண் நடிப்பில் மிகப் பெரிய பொருட்செலவில் மகதீரா படத்தை ராஜமௌலி இயக்கினார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 2010ல் மர்யாத ராமன்னா படத்தை இயக்கினார். காமெடி நடிகராக இருந்த சுனில் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

2012-ல் "நான் ஈ" எனும் "ஈகா" படத்தை நானி - சமந்தா - சுதீப் நடிப்பில் இயக்கினார். இந்த படம் 16 ஆண்டுகளுக்கு முன்பு ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதியது. இந்த படத்தின் வெற்றி ராஜமௌலியை தென்னிந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. 2015 & 2017 ஆம் ஆண்டுகளில் பாகுபலி சீரிஸ் படங்களின் மூலம் இந்திய அளவில் முன்னணி இயக்குனராக ராஜமௌலி அறியப்பட்டார்.

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அண்மையில் ரிலீசான படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவானது. படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்தனர்

RRR படத்தின் மூலம் மாபெரும் வெற்றி பெற்ற பிறகு,  மகேஷ் பாபு படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் ராஜமௌலி ஈடுபட்டுள்ளார். மகேஷ் பாபுவுடன் தான் இயக்கும் படம் உலக அளவிலான ஆக்‌ஷன் அட்வென்சர் வகைமையில் இருக்கும் என்று ராஜமௌலி தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, ஆஸ்கார் நிகழ்வில் கொடுத்த ஒரு பேட்டியில் தமது அடுத்த படம் குறித்து பேசியுள்ளார். அதில் அடுத்த படம் தனது சகோதரர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படம் என்றும். அந்த படம், காடுகளில் நடக்கும் கதையாக Forest Action Adventure  களமாக இருக்கும் என கீரவாணி கூறியுள்ளார்.

MM Keeravani Talks about Mahesh Babu Rajamouli New Film

People looking for online information on MaheshBabu, MM Keeravani, Raja Mouli will find this news story useful.