www.garudabazaar.com

Breaking : விஜய் சேதுபதியின் புதிய அவதாரம்.. இந்த பிரபல ஹீரோவின் படத்துக்காக.. விஷயம் என்ன தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதியின் புதிய அவதாரம் குறித்து, பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. 

பிரபல ஹீரோவுடன் விஜய் சேதுபதி | exclusive news on vijay sethupathi's new avatar for popular hero film

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது மாஸ்டர், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர், மாமனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படங்கள் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிரபல ஹீரோவுடன் விஜய் சேதுபதி | exclusive news on vijay sethupathi's new avatar for popular hero film

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி திட்டம் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. நடிப்பதுடன் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வந்த விஜய் சேதுபதி, இப்போது ஒரு படத்திற்கு முழுமையாக கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். குலசாமி என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் விமல் நடிக்கவுள்ளாராம். இயக்குநர் சரவணசக்தி இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல ஹீரோவுடன் விஜய் சேதுபதி | exclusive news on vijay sethupathi's new avatar for popular hero film

People looking for online information on Vijay Sethupathi, Vimal will find this news story useful.