www.garudabazaar.com

பிக்பாஸில் நடந்ததை வைத்து நிஷாவை பங்கமாய் கலாய்த்த புகழ்... வைரலாகும் புதிய வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்படியே சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட, ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஆரம்பத்தில் நம்பிக்கையான போட்டியாளராக இருந்த நிஷா "சில காரணங்களால் அவர் போட்டியை சரியாக புரிந்து கொள்ளவில்லை" என்று சக போட்டியாளர்களே பேசுவதையும் காண முடிந்தது.

pugazh makes fun of nisha நிஷாவை பங்கமாய் கலாய்த்த புகழ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது. அதிலும் முக்கியமாக புகழுக்கு தனியே நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நிஷா மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு திரும்பியுள்ளார். அப்போது பிக்பாஸ் அன்பை வைத்து நிஷாவை புகழ் கலாய்ப்பது போன்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸில் நடந்ததை வைத்து நிஷாவை பங்கமாய் கலாய்த்த புகழ்... வைரலாகும் புதிய வீடியோ..! வீடியோ

Tags : Pugazh, Nisha

தொடர்புடைய இணைப்புகள்

pugazh makes fun of nisha நிஷாவை பங்கமாய் கலாய்த்த புகழ்

People looking for online information on Nisha, Pugazh will find this news story useful.