Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

Behindwoods விருது வழங்கும் விழாவில் புகழ் மற்றும் மணிமேகலை அசத்தல் காமெடி... வேற லெவல் ரெஸ்பான்ஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. இதனை கருத்தில் கொண்டு Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப்  நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர்.

pugazh and manimegalai in Behindwoods Gold icon காமெடி அதகளம் செய்த புகழ்

இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம். அந்த வகையில் இன்று(7.03.2021) நடைபெறும் பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறையை சார்ந்த மக்களுக்கு பேவரைட்டான பல பிரபலங்களும் பங்கு பெற்றுள்ளனர்.

அந்தவகையில் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த குக் வித் கோமாளி அணியினர் விருது வழங்கும் விழாவுக்கு வருகை தந்துள்ளனர். சமீபத்தில் அனைவரது கவனத்தையும் அன்பையும் பெற்றுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அறிமுகம் என்பது தேவையில்லை. ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் போட்டியாளர்களுக்கும், கோமாளிகளுக்கும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் விருது வழங்கும் விழாவில் புகழ் மற்றும் மணிமேகலை இருவரும் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது காமெடி அதகளமாக இருந்தது. அந்த புகைப்படம் இதோ..!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

pugazh and manimegalai in Behindwoods Gold icon காமெடி அதகளம் செய்த புகழ்

People looking for online information on Manimegalai, Pugazh will find this news story useful.