Nenjuku Needhi

“ஒரு சர்ப்ரைஸ் நடிகர்”… ராம் & நிவின் பாலி படம் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி Tweet

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ராம் அடுத்ததாக நிவின் பாலி மற்றும் சூரி ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

Producer suresh kamatchi viral tweet about Director Ram movie

Also Read | "செஞ்சிட்டா போச்சு.." இரண்டே வார்த்தையில் அட்லி போட்ட செம ட்வீட்.. படு குஷியில் ரசிகர்கள்

இயக்குனர் ராம்…

கற்றது தமிழ், 'தங்க மீன்கள்', தரமணி’, 'பேரன்பு' ஆகிய உணர்வுப்பூர்வமான படங்களைக் இயக்கியவர் இயக்குநர் ராம். பேரன்பு படத்துக்குப் பிறகு இப்போது இவர் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடியில் தொடங்கியது.

Producer suresh kamatchi viral tweet about Director Ram movie

படப்பிடிப்பு…

அடுத்தடுத்து கேரளாவிலும் சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் ராம். சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி பகுதியில் ரயில் செட் அமைக்கப்பட்டு பல காட்சிகள் படமாக்கப்பட்டன. ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் கலை இயக்குநர் உமேஷ் ஜே. குமார் தத்ரூபமாக உருவாக்கிய ரயில் செட் வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இது சம்மந்தமான பல படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களைப் படக்குழுவினர் பகிர்ந்திருந்தனர். இயக்குனர் ராம் இயக்கும் எல்லாப் படங்களிலும் ரயில் ஒரு கதாபாத்திரமாகவே உருவாக்கப்பட்டு இருக்கும். சமீபத்தில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்துப் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகின்றன.

Producer suresh kamatchi viral tweet about Director Ram movie

தயாரிப்பாளரின் டிவீட்…

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தற்போது பகிர்ந்துள்ள டிவீட் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் “என்னுடைய 7 ஆவது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் ரஷ் காட்சிகளை பார்த்தேன். நிகரில்லாத நடிப்பை நிவின் பாலி, சூரி மற்றும் ஒரு சர்ப்ரைஸான நடிகர் கொடுத்துள்ளனர். இயக்குனர் ராமின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார். இதில் சர்ப்ரைஸாக ஒரு நடிகர் இருக்கிறார் என்று கூறியதை அடுத்து அது யாராக இருக்கும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Producer suresh kamatchi viral tweet about Director Ram movie

Also Read | அடுத்தடுத்து 3 படங்கள் … நடிகர் கார்த்தியின் ரிலீஸ் line up! பிறந்த நாளில் ரசிகர்கள் குதூகலம்!

மேலும் செய்திகள்

Producer suresh kamatchi viral tweet about Director Ram movie

People looking for online information on Producer suresh kamatchi, Ram movie, Suresh Kamatchi, Suresh kamatchi tweet will find this news story useful.