Nenjuku Needhi

அடுத்தடுத்து 3 படங்கள் … நடிகர் கார்த்தியின் ரிலீஸ் line up! பிறந்த நாளில் ரசிகர்கள் குதூகலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று ரசிகர்களால் சமூகவலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Actor karthi three movies release exciting line up

Also Read | கார்த்தி படத்துக்கு G.V. பிரகாஷ் போட்ட மியூசிக்.. உரிமத்தை கைப்பற்றிய உலகின் முன்னணி நிறுவனம்!

மணிரத்னம் கனவுப்படைப்பு…

இயக்குனர் மணிரத்னத்தின் பல ஆண்டுகால கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் முதல் பாகம் செப்டம்பர்  30 ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைகளை முன்னிட்டு ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஏராளமான பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் கார்த்தி பிரதானக் கதாபாத்திரங்களில் ஒன்றான வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் கதாபாத்திர அறிமுகம் சமீபத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்த படத்துக்காகக் கலைஞர்கள் அனைவரும் பெருமளவில் உழைத்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Actor karthi three movies release exciting line up

விநாயகர் சதுர்த்திக்கு விருமன்…

பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு முன்னதாக கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருந்தார். இதையடுத்து சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார்த்தி – முத்தையா கூட்டணி விருமன் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

Actor karthi three movies release exciting line up

சர்தார் தீபாவளி…

பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பும் முடிந்துள்ள நிலையில் கார்த்தி, சர்தார் படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கி நடித்து வருகிறார். கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு லைலா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சர்தார் படத்துக்கு ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், சர்தார் படத்திற்கு இசை அமைத்து வருகிறார். மேலும், பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor karthi three movies release exciting line up

அடுத்தடுத்து குறுகிய கால இடைவெளியில் கார்த்தியின் மூன்று படங்களின் ரிலீஸ் இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இதைக் குறிப்பிட்டு ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Also Read | "செஞ்சிட்டா போச்சு.." இரண்டே வார்த்தையில் அட்லி போட்ட செம ட்வீட்.. படு குஷியில் ரசிகர்கள்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor karthi three movies release exciting line up

People looking for online information on Karthi, Karthi Movie Release updates, Ponniyin Selvan, Sardar, Viruman will find this news story useful.