"பிரம்மனின் மொத்த கற்பனையாய்".. மனைவி பிறந்தநாளில் தயாரிப்பாளர் ரவீந்தர் உருக்கமான Post..!
முகப்பு > சினிமா செய்திகள்தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | PS2 : "ராஜராஜ சோழனை ஆளாக்கியவர் குந்தவை.." - ‘அகநக’ பாடல் பின்னணி குறித்து இளங்கோ கிருஷ்ணன்!
ரவீந்திரன் சந்திரசேகரன்
தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். ரவீந்தர் சந்திரசேகரன், கூர்கா, சஙகத் தமிழன் ஆகிய படங்களை விநியோகம் செய்துள்ளார். ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் குறித்து நம் Behindwoods-ல் தனது பார்வையை முன் வைக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் ரவீந்திர் வழங்கி வந்தார். மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், இந்த பெயர் மூலம் மக்கள் மத்தியிலும் மிகப் பிரபலமானவர். இவர் பிரபல சீரியல் நடிகை விஜே மகாலட்சுமியை செப்டம்பர் 1, 2022-ல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. 90 ஸ் கிட்ஸ் மத்தியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
பிறந்தநாள்
திருமணத்திற்கு பிறகு, அவ்வப்போது தம்பதி சகிதமாய் புகைப்படங்களை பதிவிடும் ரவீந்தர் அதற்கு அளிக்கும் கேப்ஷன்கள் தான் அல்டிமேட்டாக அமையும். இதனாலேயே இவருடைய பதிவுகள் சோசியல் மீடியாவில் வைரலாவதும் உண்டு. அந்த வகையில் ரவீந்தர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தனது மனைவி மகாலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கும் அவர் உருக்கமான பதிவு ஒன்றையும் எழுதியிருக்கிறார்.
அந்த பதிவில்,"பிறந்தநாள்... ஆம். இன்று என் மகாலக்ஷ்மிக்கு பிறந்தநாள்.பிரம்மனின் மொத்த கற்பனையாய் எனக்கு விற்பனையானவள் என் மகாலக்ஷ்மி. வாழ்க்கைல அது இஷ்டத்துக்கு ஒன்னு வந்தாதான் அத அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. அந்த அதிர்ஷ்டம்தான் என் மகாலக்ஷ்மி. ஒரு மனிதன் தான் பிறந்ததிலிருந்து எல்லா விஷேச நாட்களையும் கொண்டாடுவான். ஆனா அவன் பிறந்தத ஒரு விசேஷமா கொண்டாடுறது அவன் குடும்பம்தான். ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் அத கொண்டாடுறது அவனால உருவாக்கப்பட்ட குடும்பம். அப்படி உன்னால உருவாக்கப்பட்ட குடும்பத்தோட ஒரு ஆளாதான் உன் பிறந்தநாள நா கொண்டாடுறேன்.
Images are subject to © copyright to their respective owners.
நம்ம வாழ்க்கைல நாம நிறைய பேர நேசிப்போம். அவங்க நம்மல நேசிக்கனும்னு அவசியம் இல்ல.அவங்க நம்ம மேல மரியாதையாவும் அன்பாவும் இருப்பாங்க. ஆனா நாம பல பேர நேசிக்க மறந்துருப்போம். அவங்க நம்மல அளவுக்கு அதிகமா நேசிக்குறவங்களா இருப்பாங்க. அப்படி ஒன்னு என் கண்ணுல தென்பட்டப்பதான் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னே தோனுச்சு.
மகாலக்ஷ்மி.. காலைல இருந்து ஒரே யோசனை. உன் பிறந்தநாளுக்கு என்ன செய்றதுனு. 12 மணிக்கு கேக் வெட்றது ஸ்வீட் குடுக்குறது முதியோர் இல்லம் அனாதை இல்லன்னு போய் சாப்பாடு போடுறது பிடிச்ச giftவாங்கி குடுக்குறது இப்டி எல்லாமே எப்பையுமே உனக்கு எல்லாரும் பண்றதுதான். ஆனா எனக்கு உன்ன பிடிக்கும்.
அதனால எனக்கு பிடிச்ச ஒன்ன உனக்கு கொடுக்கனும்னு தோனுச்சு. அப்படி ஒரு விஷயம்தான் இந்த 'மல்லிகை பூ'. நாம நம்ம தேவைக்கு எத வேணாலும் வாங்கிக்க முடியும்ற போது இந்த பூவ உனக்கு குடுக்குறதுக்கு ஒரே காரணம் தான். இந்த பூவிற்கு நிகர் ஏதுமில்ல என் மகாலக்ஷ்மிக்கு நிகரும் யாருமில்ல. என்னப் பொருத்தவர இந்த பூ மிகப்பெரிய ஒரு gift உனக்கு நா இன்னைக்கு குடுக்குறதுக்கு. மத்த பொருள நா வாங்கி குடுக்குறதுல இருக்குற அன்ப விட அன்பே உருவான இந்த பூ வில் அதிகமா இருக்கு. So my humble gift வாங்கிக்கோ. இதுக்கப்புறம் உனக்கு பிடிச்ச எந்த பொருளையும் காசு குடுத்து நீ வாங்கிக்கலாம். ஆனா இந்த பூ என் வாழ்க்கைலயே முதன்முதலா ஒரு பொண்ணுக்கு நா வாங்கி குடுக்குற gift. அது உனக்குதான். I love you mahalakshmi" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் போஸ் கொடுத்த பிரபல நடிகர்.. அந்த கேப்ஷன் தான் செம்ம..!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Ravinder Mahalakshmi Chandi Homam Home Function Video
- Rachitha Mahalakshmi And Shivin Visited Shirdi Sai Baba Temple
- Producer Libra Ravindar Chandrasekaran Latest Post Goes Viral
- BiggBoss Rachitha Mahalakshmi Driving Bike Video Goes Viral
- Ravindar Chandrasekaran Lovely Post About Mahalakshmi
- Ravindar Mahalakshmi Visit Trichy Sri Rangam Temple
- LIBRA Ravindar Says Earning Profits After Marriying Mahalakshmi
- Rachitha Mahalakshmi With Shivin Ganesan Celebration Video
- Bigg Boss Grand Finale Fun Comments On Robert Master And Rachitha Mahalakshmi Bigg Boss 6 Tamil
- Ravindar Mahalakshmi Pongal Celebration Viral Photos
- Mahalakshmi About Her Husband Ravinder Chandrasekhar
- Fatman Ravindar Instagram Post About His Wife Mahalakshmi
தொடர்புடைய இணைப்புகள்
- தல தீபாவளி வந்தாலே Chain போட சொல்றாங்க 😒 கடுப்பான Sandiya
- "அரசி எல்லாம் Aunty ஆகிடும்" 🤣😂 மொரட்டு Fun Mode-ல் Aadhavan
- "காதலிக்கிற பொண்ண இழுத்துட்டு வந்துருவானுங்க"-பட்டிமன்றத்தில் பொளந்து கட்டிய Rekha Nair
- "அய்யய்யோ தலைப்பையே மறந்துட்டனே"-பட்டிமன்றத்தில் Aadhavan கலகல Speech
- "வீட்டை கட்டிக் காப்பவன், துபாயில் ஒட்டகம் மேய்ப்பவன்" 😂🤣 Fun-ஆ பசங்க கஷ்டத்தை பேசிய Aadhavan
- "தம் அடிப்போம், Sight அடிப்போம்,தண்ணியத்தான் கலந்து அடிப்போம்" 😂பட்டிமன்றத்தில் ரவுண்டு கட்டிய Rekha
- "ஏன்டா வெக்கமா இல்ல😳கிழிஞ்ச Pant-அ போட்டுட்டு வந்திருக்க”😮கோவப்பட்ட Sound Santhiya 🙄 Pattimandram 🔥
- "சம்மந்தமே இல்லாம பேசுறாரு Abishek Raaja"😅கலாய்த்த RJ Anandhi😂 Nagaichuvai Pattimandram🤣
- "கல்யாணத்துக்கு அப்றம் பொண்டாட்டி சொல்றத தான்.."😯 Rekha Nair-ன் அனல் பறக்கும் பேச்சு💥
- "அட இருங்க Rekha Nair😅இந்த பொண்ணுங்க மூலமா வர செலவு இருக்கே..."😮புலம்பிய Abishek Raaja😂 Pattimandram
- New Year Night பொண்ணுங்க இதான் பண்றாங்க😮 Ravindar அதிரடி பேச்சு💥வாயடைத்துப் போன Rekha Nair😨
- "IT Company வாசலில் பெண்கள் செய்யும் Atrocity"😨 செம்ம சூடா பேசிய Ravindar & Rekha Nair🥵 Pattimandram