www.garudabazaar.com

தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் போஸ் கொடுத்த பிரபல நடிகர்.. அந்த கேப்ஷன் தான் செம்ம..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் GM குமார் சமீபத்திய ட்விட்டர் பதிவு ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Famous Comedy Actor GM Kumar latest Twitter Post Goes Viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Khushbu : "இந்தியால சுனாமிக்கு அப்றம்.".. டெல்லி நிலநடுக்கத்தை உணர்ந்த குஷ்பு ஷாக் ட்வீட்

GM குமார்

தமிழில் தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்தவர் GM குமார். இவர் காதல் வைரஸ், தொட்டி ஜெயா, ராமச்சந்திரா, வெயில், மச்சக்காரன், மலைக்கோட்டை, ஆயுதம் செய்வோம், குருவி, மாயாண்டி குடும்பத்தார், தீ, மாத்தியோசி, அவன் இவன், மிளகா, கர்ணன், பல்லு படாமா பாத்துகோ உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக மாயாண்டி குடும்பத்தார் மற்றும் அவன் இவன் படங்கள் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்தன.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது புதிய படம் ஒன்றில் நடித்துவரும் குமார், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் காரியமாணிக்கம் எனும் கதாப்பாத்திரத்தில் அவர் நடிப்பதாக தெரிகிறது. இதனையடுத்து, அந்த கதாப்பாத்திரத்தின் மரணம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

கண்ணீர் அஞ்சலி

அதில் அவருடைய கண்ணீர் அஞ்சலி கட்டவுட்டுக்கு முன்பு அவர் நின்றபடி போஸ் கொடுத்திருக்கிறார். அந்த பதிவில்,"ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை🤣" என அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், முந்தைய பதிவில் சடலம் போல நடிக்கும் போது புகைப்பிடிக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார் அவர்.

Images are subject to © copyright to their respective owners.

மேலும், அந்த பதிவில்,"வந்தது தெரியும் போவது எங்கே.. வாசல் நமக்கே தெரியாது.... வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்.. இந்த மண்ணில் நமக்கே இடமேது?" என்ற பாடல் வரிகளையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Also Read | பிளடி Earthquake.. LEO ஷூட்டிங்கில் நிலநடுக்கம்..!. எல்லாரும் எப்படி இருக்காங்க? வெளியான தகவல்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Famous Comedy Actor GM Kumar latest Twitter Post Goes Viral

People looking for online information on Comedy Actor, GM Kumar, GM Kumar latest Twitter Post will find this news story useful.