தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸாவதன் பின்னணி என்ன ? - தயாரிப்பாளர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கௌதம் மேனன் தற்போது நடிகர் வருணை வைத்து 'ஜோஷ்வா இமை போல நீ காக்க' என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

Producer Ishari K Ganesh about Dhanush Enai Noki Paayum Thota release

இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனுஷ் - மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் வருகிற நவம்பர் 29 ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

இந்த  படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் வெளியிடவுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது, என் சகோதரியின் மகன் வருணுக்காக ஒரு படம் இயக்குங்கள் என்று இயக்குநர் கௌதம் மேனனிடம் கேட்டிருந்தேன்.

அப்போது ஜோஷ்வா என்ற பெயரில் அவர் சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது. அதிக பொருட் செலவில் காதல் - ஆக்சன் திரைப்படமாக அந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீஸர் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. கௌதம் மேனனிடம் டீஸர் நன்றாக இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு அது வெரும் டீஸர் தான் சார். படம் வரும் போது பாருங்க என்றார்.

தற்போது ஜோஷ்வா படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு எனை நோக்கி பாயும் தோட்டோவை உங்களுடைய பேனரில் ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் சார் என் கௌதம் மேனன் என்னிடம் கூறினார். அவரிடம் படம் பார்த்து முடிவு செய்வதாக அறிவித்தேன். அதன் படி படம் பார்த்தேன். எனக்கு படம் மிகவும்பிடித்திருந்தது. எல்லா காலேஜ் ஸ்டூடன்ஸ்க்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும்.

ஒரு காதலுடன் கூடிய ஆக்சன் படம்.பாடல்கள் எல்லாமே பெரிய ஹிட்.  உடனே நான் ரிலீஸ் பன்றேன் சார் என்று  தெரிவித்தேன். அதன் படி இந்த படம் வருகிற 29 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. . ஏற்கனவே தனுஷின் அசுரன் அசுரத்தனமான வெற்றி பெற்றுள்ளது. அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் முற்றிலும் வித்தியாசமானவை. தனுஷ் இந்த படத்துல ரொம்ப ஹேன்ட்ஸம் ஆக இருக்காரு. நான் தனுஷை இதுவரை இவ்வளவு அழகாக பார்த்ததில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸாவதன் பின்னணி என்ன ? - தயாரிப்பாளர் தகவல் வீடியோ