www.garudabazaar.com

"அட்ராசக்க".. தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர்.. நாயகியாக களமிறங்கும் SK பட நடிகை!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகை பற்றிய அதிகாரபூர்வ தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Priyanka mohan to act in dhanush captain miller movie

கேப்டன் மில்லர் படத்தினை ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகஉள்ள கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர், சில நாட்களுக்கு முன் வெளியானது. மேலும் மோஷன் போஸ்டர் கூட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக கேப்டன் மில்லர் உருவாகவுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய எடிட்டிங் பணிகளை எடிட்டர் நாகூரன் மேற்கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து, கேப்டன் மில்லர் படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிஷென் இணைந்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதற்கு அடுத்தபடியாக, கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் லுக் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

அந்த வகையில், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் இணைந்துள்ள நடிகை குறித்த அதிகாரப்பூர்வ தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான நடிகை பிரியங்கா மோகன், தனுஷ் படத்திலும் இணைந்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை புகைப்படத்துடன் படக்குழு அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka mohan to act in dhanush captain miller movie

People looking for online information on Arun Matheswaran, Captain Miller, Dhanush, Priyanka Mohan, Sundeep Kishan will find this news story useful.