www.garudabazaar.com

"ஏஜெண்ட்" ராஜகாளியம்மன்.. காக்கும் கடவுள்.. மாஸ் சீனை இன்னும் மாஸ் ஆக்கிய மீம்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மை காலத்தில் இளைஞர்களின் யுகம் என்று சொல்லக்கூடிய டிஜிட்டல் யுகத்தில் நாம் பார்க்கக்கூடிய நிகழ்வுகள் மிகவும் ஆச்சரியமாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதை காண முடிகிறது.

vikram movie rajakaaliamman scene mass meme viral

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளையும், திரைப்படங்களையும் வைத்து மீம்ஸ், ட்ரோல் என இளைஞர்களின் புதிய புதிய சிந்தனைகள் நம்மை ஆட்கொள்கின்றன. தற்போது வரும் திரைப்படங்களும் பெரும்பாலும் இளைஞர்களின் ரசனைகளை வைத்தே மதிப்பீடு செய்யப்படுகின்றன.

அந்த வகையில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் ‘விக்ரம்’ என்கிற திரைப்படம் வெளியாகி, அதிக நாட்கள் ஓடியதுடன் அதிக வசூல் குவித்து மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் உயர் ரக காரை இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு பரிசளித்தார்.

இதேபோல் இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் சூர்யாவுக்கும் கமல்ஹாசன், விலையுயர்ந்த கடிகாரத்தை பரிசாக அளித்து இருந்தார். லோகேஷ் கனகராஜின் மல்டிவர்ஸ் பாணியில் உருவாகிய இந்த திரைப்படத்தில் மிகவும் ட்ரெண்டிங்கான விஷயமாக ஏஜென்ட் என்கிற பெயர் மாறியது. ஒரு இடத்தில் தன்னுடைய அடையாளத்தை மாற்றிக் கொண்டு தன் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஏஜென்ட் என்கிற இந்த அடையாளத்துக்குள் வரும் பல கதாபாத்திரங்கள் இப்படத்தில் இடம் பெற்றனர்.

vikram movie rajakaaliamman scene mass meme viral

அப்படித்தான் தற்போது ராஜகாளியம்மன் திரைப்படம் தொடர்பான ஒரு மீம்ஸ் வைரல் ஆகி வருகிறது. அதன்படி, ரம்யா கிருஷ்ணன், கௌசல்யா, வடிவேலு மற்றும் பலர் நடித்த ராஜகாளியம்மன் திரைப்படத்தின் ஒரு காட்சியில் நிழல்கள் ரவி, வடிவேலு வேஷத்தில் வந்து வடிவேலுவின் தங்கையான கவுசல்யாவை பொய் சொல்லி அழைத்துச் செல்வார். அப்போது நிழல்கள் ரவி சிரித்துக்கொண்டே உன்னை அழைத்துச் செல்வது, உன் அண்ணன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? என்று சொல்லி உருமாறுவார். பின்னர் அவர் நடிகர் நிழல்கள் ரவியாகிவிடுவார்.

அப்போது அவரை பார்த்து பரிகசித்து சிரிக்கும் கௌசல்யா, ‘உன்னுடன் வருவது உன் தங்கை என நினைத்துக் கொண்டிருந்தாயா?’ என்று சிரித்தவுடன் கௌசல்யா ராஜ காளி அம்மனாக மாறுவார். அம்மன் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் பொருந்தி இருப்பார். இதை பதிவிட்ட ரசிகர்கள் ஏஜென்ட் ராஜகாளியம்மன் - பாதுகாப்புக்கான பெண் கடவுள் என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை பதிவிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

vikram movie rajakaaliamman scene mass meme viral

People looking for online information on Kamal Haasan, Ramya Krishnan, Vadivelu will find this news story useful.