www.garudabazaar.com

அட.. ‘அந்த சீசன்லயே’ BiggBoss-க்குள்ள பிரியங்கா வந்துருக்காங்களா? Viral த்ரோபேக் ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி 102 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் இரண்டு , மூன்று நாட்களி இந்நிகழ்ச்சியின் ஃபினாலே ஒளிபரப்பாகும்.

Priyanka in biggboss season 3 vijay tv biggboss5 video viral

யார் ஜெய்க்க போகிறார்கள்?

தற்போது நிரூப், பிரியங்கா, ராஜூ, பாவனி மற்றும் அமீர் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கின்றனர். இவர்களில் யார் என்பது குறித்த பேச்சுகளும், கடுமையான வாதங்களும் அனல் பறக்க, பிக்பாஸ் ரசிகர்களிடையே நிலவி வருகின்றன.

Also Read: அடடா.. பிக்பாஸ்ல அமீர் ஜெயிக்கணும்னு அவரது மொத்த குடும்பமே செய்த காரியம்! நெகிழ்ச்சி வீடியோ!

விஜய் டிவி விஜே பிரியங்கா

இவர்களுள் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் விஜேவாக இருந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பிரியங்கா. தனக்கே உரிய கலகலப்பான முறையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பின், கோபம், அழுகை, ஆற்றாமை, நட்பு என அனைவருக்கும் இருக்கும் அதே எதார்த்த இயல்புகளை தன் பாணியில் பிரதிபலித்தார்.

Priyanka in biggboss season 3 vijay tv biggboss5 video viral

நிரூப் - பிரியங்கா மற்றும் தாமரை - பிரியங்கா

இதனிடையே நிரூப் மற்றும் தாமரை இருவரிடையே பிரியங்காவுக்கு வாக்குவாதங்களும், உரசல்களும், மோதல்களும் பல்வேறு சமயங்களில் ஏற்பட்டன. எனினும் தாமரை வெளியேறும் முன்னர் பிரியங்கா தனக்கு தேவையானதை பார்த்து பார்த்து சமைத்துக் கொடுத்ததற்காக தாமரைக்கு நன்றி கூறினார். இதேபோல் நிரூப், பிரியங்காவை அவ்வப்போது பேசி கஷ்டப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டதுடன் தங்க செயினை பரிசாக கொடுத்தார்.

Priyanka in biggboss season 3 vijay tv biggboss5 video viral

3வது சீசன்லயே பிரியங்கா எண்ட்ரி

‘இப்படி 5-வது சீசன் தான் பெஸ்ட்’, ‘பிக்பாஸ்க்கு இன்னொரு பெயர் பெருசு’,  ‘நான் தான் பிக்பாஸ் வீட்டின் சிருசு’ஆனால் பிக்பாஸ் 3வது சீசனில் பிரியங்கா சிறப்பு எண்ட்ரியாக வந்திருக்கிறார். இதை பலரும் மறந்திருக்கலாம். பிக்பாஸ் 3வது சீசன் நடந்துகொண்டிருந்தபோது,  பிரியங்கா, பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்த, வீடியோ தற்போது மீண்டும் இணையதளத்தில் ரசிகர்களிடையே வலம் வருகிறது.

Priyanka in biggboss season 3 vijay tv biggboss5 video viral

டைம் டிராவாலா? அட என்னப்பா..

தற்போதைய நாட்களில் டைம் டிராவல் எனும் கான்செப்ட் மிகவும் பிரபலமாகவும், திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு ரசிகர்களிடையே சகஜமாகவும் இருக்கின்றன. எனவே இந்த பழைய ப்ரோமோவை திடீரென இப்போது பார்த்தவர்கள், என்ன  இது? பிரியங்கா 5வது சீசனில் இருந்து, முந்தைய சீசனான 3வது சீசனுக்கு டைம் டிராவல் செய்து போய்விட்டாரா? என விளையாட்டாக பேசி வருகின்றனர்.

Also Read: நிரூப்க்கு முத்தம் கொடுத்த பாவனி!.. அதிர்ந்த அமீர்! அப்பவே ஹேர் கட் பண்ணிருக்கலாமோ!

அட.. ‘அந்த சீசன்லயே’ BIGGBOSS-க்குள்ள பிரியங்கா வந்துருக்காங்களா? VIRAL த்ரோபேக் ப்ரோமோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka in biggboss season 3 vijay tv biggboss5 video viral

People looking for online information on Amir pavani, Biggboss 5 tamil, Biggboss5tamil, Pavani amir, Star vijay, Vijay Television, Vijay tv will find this news story useful.