Pisasu 2
www.garudabazaar.com

கத்ரினா கைஃப் போட்டோவுக்கு பஃயர் விட்ட பிரியங்கா சோப்ரா! இது தான் காரணமா? பின்னணி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கத்ரீனா கைஃப்பின் புதிய பிகினி படங்களுக்கு பிரியங்கா சோப்ரா ரியாக்ட் செய்துள்ளார்.

Priyanka Chopra Reacts Katrina Kaif Bikini Pictures

Also Read | "அமெரிக்கா போனாலும் நம்மூர் பாட்டு தான்".. நீச்சல் குளத்தில் MASS காட்டிய பிரியங்கா சோப்ரா!

விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் டிசம்பர் 9, 2021 அன்று ராஜஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

கத்ரீனா கைஃப், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கடற்கரைப் பிகினி படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார், அவரது சமீபத்திய படங்களுக்கு அவரது ரசிகர்களிடமிருந்து நிறைய ஆதரவு நிலவி வருகின்றது.

Priyanka Chopra Reacts Katrina Kaif Bikini Pictures

கத்ரீனா, இன்று (29.04.2022) தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பிகினி படங்களைப் பகிர்ந்துள்ளார், அதில் மூன்று நீல நிற இதயங்களை கேப்சனாக தலைப்பிட்டுள்ளார். நீல நிற பிராலெட் மற்றும் உயரமான பிகினி பாட்டம் அணிந்திருந்த கத்ரீனா, ஈரமான தலைமுடியை முகத்தில் இருந்து நகர்த்தியது போல் அந்த புகைப்படங்கள் உள்ளன. இந்த பிகினி புகைப்படங்களுக்கு பிரியங்கா சோப்ரா, பின்னூட்டத்தில் நெருப்பு எமோஜியை பதிவிட்டு பதிலளித்தார்.

Priyanka Chopra Reacts Katrina Kaif Bikini Pictures

ஜோயா அக்தர் மற்றும் ரீமா காக்தி எழுதி, ஃபர்ஹான் அக்தர் இயக்கிய ஜீ லெ ஜரா என்ற சாலைப் பயணத் திரைப்படத்தில் அலியா பட் உடன் பிரியங்காவும் கத்ரீனாவும் ஒன்றாகக் நடிக்கிறார்கள். மூவரும் இதற்கு முன் எந்த படத்திலும் ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றியதில்லை. இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இப்படம், பத்தாண்டுகளுக்குப் பிறகு இயக்குனராக ஃபர்ஹான் இயக்கிய படம் ஆகும். 2001 ஆம் ஆண்டில் சாலை பயண படமான தில் சாஹ்தா ஹைய் மூலம் இயக்குனராக அறிமுகமான பர்ஹான், கடைசியாக 2011 இல் ஷாருக்கான் நடித்த டான் 2 படத்தை இயக்கியிருந்தார்.

Priyanka Chopra Reacts Katrina Kaif Bikini Pictures

கடைசியாக 2021 ஆம் ஆண்டு சூரியவன்ஷி படத்தில் நடித்த கத்ரீனா, போன் பூட், மெர்ரி கிறிஸ்மஸ் மற்றும் டைகர் 3 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அந்தாதுன் புகழ் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ். படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார்.

இதற்கிடையில், பிரியங்கா சோப்ரா அடுத்ததாக இட்ஸ் ஆல் கம்மிங் பேக் டு மீ, என்டிங் திங்ஸ் மற்றும் சிட்டாடல் ஆகிய படங்களில் நடிக்கிறார். கடைசியாக பிரியங்கா சோப்ரா நடித்து மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் 4 ஆம் பாகம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

Priyanka Chopra Reacts Katrina Kaif Bikini Pictures

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

கத்ரினா கைஃப் போட்டோவுக்கு பஃயர் விட்ட பிரியங்கா சோப்ரா! இது தான் காரணமா? பின்னணி தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka Chopra Reacts Katrina Kaif Bikini Pictures

People looking for online information on Katrina Kaif, Katrina Kaif Bikini Pictures, Priyanka Chopra will find this news story useful.