www.garudabazaar.com
iTechUS

Priya bhavani shankar : புதுவீட்டை தொடர்ந்து சொந்த ரெஸ்டாரன்ட் .. அசத்தும் பிரியா பவானி சங்கர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர் ரெஸ்டாரன்ட் ஒன்றை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Priya Bhavani Shankar started her own Liam dinner resturant

Also Read | சுந்தர் சி இயக்கத்தில் விஜய் சேதுபதி?.. சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பார்ட்..? போடு செம்ம

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜய்யுடன் மாபியா, யானை படங்களில் நடித்தார்.   யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்திலும், அதர்வா நடித்த 'குருதி ஆட்டம்' படத்தில் வெண்ணிலா எனும் கதாபாத்திரத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.  

Priya Bhavani Shankar started her own Liam dinner resturant

மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம் படத்தில் ரஞ்சனி எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். கடைசியாக பிரியா பவானி சங்கர் நடிப்பில் தெலுங்கு மொழியில் "கல்யாணம் காமனியம்" படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

Priya Bhavani Shankar started her own Liam dinner resturant

பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது ருத்ரன், பத்து தல, பொம்மை, டிமான்ட்டி காலனி- 2, அகிலன், இந்தியன் 2 உள்ளிட்ட  படங்கள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Priya Bhavani Shankar started her own Liam dinner resturant

அதில், "நமது சொந்த உணவகம்" - இது எப்போதும் கனவாக இருந்தது, அதற்கான நாள் நெருங்கி வர நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். நாங்கள் எங்கள் கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம், உங்கள் அனைவருக்கும் விரைவில் சேவை செய்ய உள்ளோம். ❤️ LIAM's Dinner - விரைவில்..." என பிரியா பவானி சங்கர் வீடியோ வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

Also Read | வாரிசு பட வெற்றி கொண்டாட்டம்.. விஜய்யுடன் வம்சியின் மனைவி & மகள்.. வைரல் போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Priya Bhavani Shankar started her own Liam dinner resturant

People looking for online information on Priya Bhavani Shankar will find this news story useful.